பஞ்சாப் நேசனல் வங்கியின் பெஹார் கிளை, தலைமை காசாளராக பணியாற்றிய ரோஹித் ஸ்ரீவஸ்தவா (28) பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், பஞ்சாப் நேசனல் வங்கி கிளையைச் சேர்ந்த தலைமைக் காசாளரின் உடல் கால்வாய் பாலத்தின் கீழே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ. 12 ஆயிரத்து 682 மோசடியில், நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேசனல் வங்கி ஆடிப்போய் கிடக்கிறது.
வங்கியின் அதிகாரிகள் இந்த மோசடிக்கு துணை போனார்கள் என்று வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகருக்கு உட்பட்ட பஞ்சாப் நேசனல் வங்கியின் பெஹார் கிளை, தலைமை காசாளராக இருந்த ரோஹித் ஸ்ரீவஸ்தவா (28) பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல் பல்ராம்பூர் மாவட்டத்தின் மங்காபூர் சாலையில் அமைந்த கால்வாய் பாலம் ஒன்றின் கீழ், நீரில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அவரது உடலை மீட்டு, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், ஸ்ரீவஸ்தவா எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அதற்கான காரணம் என்ன? என்று விசாரணையில் இறங்கியுள்ளனர்.