அமெரிக்கச் செய்தி சேனலின் நேரலை ஒன்றில் திடீரெனப் புகுந்த பறவையால் விறுவிறுப்பான செய்தி நேரம் கலகலப்பானது.
அமெரிக்காவின் செய்தி சேனல் ஒன்றில் கானெர்ட் மற்றும் மெடினா ஆகிய இரண்டு செய்தியாளர்கள் நேரடி செய்தி வாசிப்பில் இருந்தனர். அந்த சமயம் சானல் ஸ்டுடியோவின் மற்றொரு பகுதியில் விலங்குகள் காப்பகம் குறித்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சரியாகச் செய்திகளின் ஊடே அடுத்த நிகழ்ச்சியாக 'விலங்குகள் காப்பகம்' நிகழ்ச்சி இடம்பெறும் என செய்தியாளர்கள் அறிவிக்கும் நேரம் எங்கிருந்தோ பறந்து வந்த பறவை ஒன்று அங்கு செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண் செய்தியாளரின் தலையில் வந்து அமர்ந்தது.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் நிலைகுலையாத அந்தப் பெண் செய்தியாளர் அமைதியாக உட்கார்ந்திருக்கு அருகிலிருந்த மற்றொரு செய்தியாளரோ அதைக் கேலி செய்து சிரிக்க, பறவி ஒரே தாவாக கேலி செய்த செய்தியாளரின் தலைக்குத் தாவியது. இதனால், செய்தியாளர்கள் இருவரம் மாறி மாறி கேலி செய்துகொள்ள பரபரப்பான செய்தி நேரம், கலகலப்பான கலாய் நேரமாக மாறியது.
இந்த பறவை அட்டகாச வீடியோவை செய்தியாளர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர தற்போது இந்த வீடியோ சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.