மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் 60 சதவீதம் பிடிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்கப்படுகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது.இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் கூறியதாவது:
முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் இந்த மாத ஊதியத்தில் 60 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதே போல், மகாராஷ்டிர அரசு உயர் அதிகாரிகளின் சம்பளத்தில் 50 சதவீதமும், இதர அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதமும் பிடித்தம் செய்யப்படும். இதற்கான உத்தரவை முதல்வர் உத்தவ் தாக்கரே பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு அஜித்பவார் கூறியுள்ளார்.
ஏற்கனவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 75 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்.