கொரோனா பரவாமல் தடுக்கும் பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார்.
உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலக அளவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 50 பேர் உயிரிழந்து விட்டனர். 150 பேர் வரை குணமடைந்து விட்டனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலையில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை வீடியோ கான்பரன்சில் நடைபெற்றது. அப்போது மாநிலங்களில் ஊரடங்கு நிலவரம் குறித்து விசாரித்தறிந்தார். கொரோனா சிகிச்சை மருத்துவமனைகள், நோய்த் தடுப்பு கருவிகள் இருப்பு, பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட வசதிகளைக் கேட்டறிந்தார். மேலும், டெல்லி மாநாட்டிலிருந்து திரும்பிய அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு கூறினார்.