கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து காங்கிரஸ் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் இது வரை 1965 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, அக்கட்சித் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று(ஏப்.2) காலையில் கூடியது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, குலாம்நபி ஆசாத், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அவரவர் வீடுகளில் இருந்தபடியே ஆலோசனையில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசும் போது, நாட்டில் எதிர்பாராத நோயால் மக்கள் துன்புறும் வேளையில் நாம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இந்த தருணத்தில் நாம் மக்களுக்கு எப்படி உதவுவது என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.