பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிகிறது. ஆனாலும், விமானம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து தவிர மற்ற பல்வேறு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஊரடங்கு அமலிலிருந்தாலும் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது அல்லது பொது போக்குவரத்து சேவையை மட்டும் மே 31ம் தேதி வரை நிறுத்தி வைப்பது பற்றி அவர் அறிவிக்கலாம். மேலும், ஊரடங்கு முடிந்த பின்பும் மக்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அவர் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.