சிபிராஜின் கபடதாரி பட டப்பிங் வேலைகள் தொடங்கியது..

sibis Kabadadaari movie dubbing work started

by Chandru, May 12, 2020, 13:23 PM IST

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்குத் தரமான படங்களைத் தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராகத் தேசிய விருது பெற்றதோடு, சினிமாவின் விளம்பர நுணுக்கங்களையும் நன்கு அறிந்த தயாரிப்பாளராகத் திகழும் தனஞ்செயன்.கொலைகாரன் வெற்றியைத் தொடர்ந்து கபடதாரி என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.


சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயப்பிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து நேற்று (மே
11) கபடதாரி படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கியது. விரைவில் படத்தின் அனைத்து பின்னணி வேலைகளும் நிறைவுபெற்று படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஹேமந்த் ராவ் இப்படத்தின் கதை எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்து திரைக் கதை வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல்.படத் தொகுப்பு செய்கிறார். வணிகத் தலைமையை எஸ்.சரவணன் ஏற்க, நிர்வாக தயாரிப்பை என்.சுப்ரமணியன் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை ஜி.தனஞ்செயன் கவனிக்கிறார்.

You'r reading சிபிராஜின் கபடதாரி பட டப்பிங் வேலைகள் தொடங்கியது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை