இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90,535 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5394 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரானோ வைரஸ், இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவிவிட்டது. இந்தியாவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஜூன்1) காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் நேற்று புதிதாக 8392 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மட்டுமே 230 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90,535 ஆக உயர்ந்துள்ளது. 91,819 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5394 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 67,655 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 2200 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 22,333 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 173 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 19,844 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.