அவள் அப்படி தான் ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.. ரஜினி, கமல் வேடத்தில் நடிப்பது யார்?

Shruti to play the lead in Aval Appadithan remake

by Chandru, Jun 1, 2020, 10:16 AM IST

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஸ்ரீபிரியா நடித்து 1978ம் ஆண்டு திரைக்கு வந்த படம் அவள் அப்படி தான். சி.ருத்ரய்யா இயக்கி இருந்தார். இப்படத்தை பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளர்.

இதுபற்றி அவர் கூறியதாவது:அவள் அப்படி தான் படத்தின் கதை தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான கதையாக இருக்கும். ஏற்கனவே நான் ஸ்ருதி ஹாசனுடன் பணியாற்றி இருக்கிறேன் அவரிடம் தொடர்பு கொண்டு இப்படத்தை ரீமேக் செய்வது குறித்தும் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் கேட்டேன். அவரும் அப்படத்தை மீண்டும் பார்த்துவிட்டு நடிக்கச் சம்மதித்தார். ரஜினி வேடத்தில் சிம்புவும். கமல் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்தால் பொருத்தமாக இருக்கும். துல்கரிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன் , சிம்புவிடம் இன்னும் பேசவில்லை. தயாரிப்பாளர் ரெடியாக இருக்கிறார்.

ஆனால் இப்படத்தின் உரிமை யாரிடம் உள்ளது என்பது தெரியவில்லை. ருத்ரையா இறந்துவிட்டார். அவரது மகள் அமெரிக்காவில் இருக்கிறார். அவள் அப்படி தான் படத்தைக் காட்சிக்குக் காட்சி அப்படியே எடுக்கப் போவதில்லை. படத்தைத் தொடங்கிய பிறகு பிரச்சனைகள் எதுவும் வரக்கூடாது என்பதால் அதற்காக முயன்று வருகிறேன்.
இவ்வாறு பத்ரி வெங்கடேஷ் கூறினார்.

You'r reading அவள் அப்படி தான் ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.. ரஜினி, கமல் வேடத்தில் நடிப்பது யார்? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை