இந்தியாவில் 3 லட்சம் பேருக்கு கொரோனா.. பலி 8884 ஆக அதிகரிப்பு..

India crosses 3 lakh #COVID19 cases

by எஸ். எம். கணபதி, Jun 13, 2020, 13:43 PM IST

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கை 8884 ஆக உள்ளது.இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியது. இது வரை 3 லட்சத்து 8993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 54330 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 45,779 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


நாடு முழுவதும் நேற்று மட்டுமே 386 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 8884 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 3493 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அங்கு மொத்தத்தில் ஒரு லட்சத்து 1141 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3717 பேர் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் தமிழகத்தில் 40,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 367 பேர் பலியாகியுள்ளனர். இவற்றுக்கு அடுத்து டெல்லி, குஜராத், ம.பி. மாநிலங்களில் கொரோனா அதிகமாகப் பரவியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தொட்ட நிலையில், உலக அளவில் 4வது இடத்திற்கு வந்து விட்டது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்தியாவில் 3 லட்சம் பேருக்கு கொரோனா.. பலி 8884 ஆக அதிகரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை