28 வருடம் இணை பிரியாத அமலா.. நடிகருடன் சந்தோஷ வாழ்வு..

Nagarjuna and Amala celebrate 28th wedding anniversary

by Chandru, Jun 13, 2020, 10:56 AM IST

நடிகர், நடிகைகள் படங்களில் ஜோடியாக நடிக்கும்போது சில சமயம் காதலில் விழுகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அந்த திருமண வாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பது கேள்விக்குறிதான். இருவருக்கும் புரிதல் இருந்துவிட்டால் அந்த காதல் திருமணம் வாழ்வின் இறுதிக் காலம்வரை தொடரும் என்பதற்கு உதாரணமாக சில ஜோடிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


டி.ராஜேந்தர் மூலம் மைதிலி என்னைக் காதலி படத்தில் அறிமுகமானவர் அமலா. அதன் பிறகு ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். அப்போது நடிகர் நாகார்ஜுனாவுடன் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொண்டனர். 1992ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. அகில் என்ற மகன் இருக்கிறார்.

நட்சத்திர ஜோடி திருமணம் முடிந்து 28 வருடங்கள் இணை பிரியாமல் வாழ்ந்து வரும் அமலா. நாகார்ஜூனா தம்பதிக்குப் பலரும் வாழ்த்து பகிர்ந்தனர். வாழ்த்திய உள்ளங்களுக்கு நாகார்ஜூனா நன்றி தெரிவித்திருக்கிறார்.60 வயதாகும் நாகர்ஜுனா இன்னும் தனது உடற்கட்டை ஃபிட்டாக வைத்திருக்கிறார். விரைவில் தனுஷ் இயக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார்.

You'r reading 28 வருடம் இணை பிரியாத அமலா.. நடிகருடன் சந்தோஷ வாழ்வு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை