காஷ்மீர் என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

3 terrorists killed in Kashmir Anantnag encounter

by எஸ். எம். கணபதி, Jun 29, 2020, 10:05 AM IST

காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை போலீசார் கண்டுபிடித்துப் பிடிக்க முயன்ற போது நடந்த என்கவுண்டரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் வேளையில், காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். அதைக் காஷ்மீர் அதிரடிப்படை போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தடுத்து வருகின்றனர்.

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்று அதிகாலையில் காஷ்மீர் அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்குப் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீசார் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏற்கனவே கடந்த 26ம் தேதியன்று புல்வாமா மாவட்டத்தில் சேவா உல்லர் பகுதியில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதற்கு முன்பு, வடக்கு காஷ்மீரில் சோபோர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தது தடுக்கப்பட்டது.
தற்போது காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை