பக்ரீத் பண்டிகை.. தமிழகத்தில் வீடுகளில் முஸ்லிம்கள் தொழுகை..

by எஸ். எம். கணபதி, Aug 1, 2020, 12:42 PM IST

நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள், இன்று பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முஸ்லிம் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த திருநாளில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகைகளை நடத்தி, அனைவருக்கும் உணவைப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், டெல்லி, கேரள மாநிலங்களில் மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு மாநில அரசு அனுமதியளித்திருக்கிறது.

கேரளாவில் பிறை தெரிந்ததை ஒட்டி நேற்று ஈத் திருநாள் கொண்டாடப்பட்டது. டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி ஜூம்மா மசூதியில் முஸ்லிம்கள் கூடி, சமூக இடைவெளி விட்டு தொழுகை நடத்தினர். இதே போல், முக்கிய மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்படாததால், மக்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். பல நகரங்களில் மொட்டை மாடிகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஈத் திருநாள் வாழ்த்துக்கள். இந்த திருநாளில் சமூக நல்லிணக்கத்தைப் பரப்புவோம். சகோதரத்துவத்தையும், அன்பையும் பரிமாறிக் கொள்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

READ MORE ABOUT :

More India News