இந்தியாவில் ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா.. 764 பேர் உயிரிழப்பு..

Single-day spike of 57,117 corona positive cases, 764 deaths in India.

by எஸ். எம். கணபதி, Aug 1, 2020, 13:19 PM IST

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 764 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது.இந்தியாவில் நேற்று(ஜூலை31) மட்டும் புதிதாக 57,117 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதையடுத்து கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 16 லட்சத்து 95,988 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இதில் 10 லட்சத்து 94,374 பேர் குணம் அடைந்துள்ளனர். 5 லட்சத்து 65,153 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 764 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையும் சேர்த்து, கொரோனா பலி எண்ணிக்கை 36,511 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதி முதலாவதாகக் கேரளாவில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு, 109 நாள் கழித்து மே 19ம் தேதியன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சமானது. அதற்குப் பிறகு 15 நாளில் 2வது லட்சம், 10 நாளில் 3வது லட்சம், 8 நாளில் 4வது லட்சம் என்று வரிசையாகப் பாதிப்பு அதிகரித்து வந்தது. தற்போது தினமும் சராசரியாக 55 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.தற்போது, அமெரிக்காவில் 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 26 லட்சம் பேருக்கும் கொரோனா பாதித்திருக்கிறது. அமெரிக்காவில் 1.53 லட்சம் பேரும், பிரேசிலில் 92 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

You'r reading இந்தியாவில் ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா.. 764 பேர் உயிரிழப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை