இப்போது யாருக்கு, எப்படி, யார் மூலம் கொரோனா பரவும் எனக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வெளியில் செல்பவர்கள் பலரும் அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டிய நிலை விரைவில் வர வாய்ப்புள்ளது. தற்போது பல்வேறு நாடுகளில் பயணம் செய்யும்போது விமானங்களில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணிகள் விமானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து இந்தியாவுக்குச் செல்பவர்கள் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று ஏர் அரேபியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஃபிளை துபாய் நிறுவனமும் இந்தியா செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று அறிவித்திருந்தது. இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் ஏர் சுவிதாவில் பதிவு செய்தால் மட்டும் போதும் என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.