`நீங்கள் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல.. அதையும் தாண்டி! - தோனிக்கு மோடி அனுப்பிய வாழ்த்து மடல்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனியை பாராட்டி பிரதமர் மோடி இரண்டு பக்க கடிதம் அனுப்பியிருக்கிறார். இதை தோனி இன்று தனது வலைப்பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில், ``ஆகஸ்ட் 15ம் தேதியன்று உங்களுக்கேயுரிய தன்னடக்க முத்திரையுடன் சிறு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். இது ஒன்றே ஒரு நாடு முழுவதும் நேயத்துடன் கூடிய நீண்ட உரையாடல் புள்ளியாக அமைந்தது. 130 கோடி இந்தியர்களும் உங்கள் முடிவைக் கண்டு ஏமாற்றமடைந்தார்கள், ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பணிகளுக்கு நிரந்தர நன்றியுடையவர்கள் ஆனார்கள்.

நீங்கள் வெற்றி பெற்ற கேப்டன்களில் ஒருவர். இந்தியாவை உலக அளவில் முன்னிலைக்குக் கொண்டு சென்றதில் நீங்கள் மிக முக்கிய காரணி. மிகப்பெரிய பேட்ஸ்மேன், மிகப்பெரிய கேப்டன்களில் ஒருவர், நிச்சயமாக கிரிக்கெட் இதுவரை பார்த்ததில் சிறந்த விக்கெட் கீப்பர் நீங்கள் என்று வரலாற்றில் உங்கள் பெயர் இடம்பெறும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் மீதான நம்பகத்தன்மை, நீங்கள் போட்டிகளை வெற்றிகரமாக நீங்கள் முடிக்கும் பாணி, குறிப்பாக 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி என எப்போதும் பல தலைமுறைகளுக்குப் பொதுமக்கள் நினைவில் மறையாமல் நிற்கும். ஆனால் மகேந்திர சிங் தோனி என்ற பெயர் அவரது கிரிக்கெட் புள்ளி விவரங்களுக்காக மட்டுமோ அல்லது குறிப்பிட்ட மேட்ச்-வின்னிங் பங்களிப்புக்காக மட்டுமோ நினைவில் கொள்ளத்தக்கதல்ல, உங்களை விளையாட்டு வீரராக மட்டும் பார்ப்பது நியாயமல்ல. உங்கள் தாக்கத்தை ஒரு நிகழ்வு என்பதாகப் பார்ப்பதே சரியானது.

புதிய இந்தியா உணர்வின் முக்கிய உதாரணங்களில் நீங்கள் ஒருவர். இங்கு குடும்பப் பெயர்கள் மக்களின் விதியை தீர்மானிப்பதில்லை, இவர்கள் தங்கள் பெயர்களையும் தங்கள் விதிகளையும் தாங்களே தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். நாம் எதை நோக்கி முன்னேறிச் செல்கிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் நாம் எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல. இந்த உணர்வைத்தான் நீங்கள் இளைஞர்களிடத்தில் உருவாக்கியுள்ளீர்கள், அவர்களுக்கு அகத் தூண்டுகோலாக இருந்துள்ளீர்கள். களத்தில் உங்களது மறக்க முடியாத தருணங்கள் ஒரு குறிப்பிட்ட தலைமுறை இந்தியர்களை உதாரணமாக எடுத்துக் காட்டி விளக்குகிறது" என்று நெகிழ்ந்து தோனி குறித்துப் பாராட்டியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

READ MORE ABOUT :