இ-பாஸ் நடைமுறை ரத்தா?.. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதி!

HM release new rules for epaas

by Sasitharan, Aug 22, 2020, 17:19 PM IST

Unlock 3ல் கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ``மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்கு உள்ளேயும் பொதுமக்கள் பயணம் செய்யவும், பொருட்களைக் கொண்டுசெல்ல கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது. பொதுமக்கள் பயணிக்கவும், பொருட்களைக் கொண்டுசெல்லக் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பொருளாதாரரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது.

அதனால், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்துக்குள்ளே மக்கள் பயணம் செய்ய இ-பாஸ் போன்ற அனுமதி வாங்கும் நடவடிக்கைளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலையை மாநில தலைமைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுவதாகும்" எனக் கூறியுள்ளார்.

மத்திய அரசின் தீடீர் அறிவிப்பால் தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. எனினும் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

You'r reading இ-பாஸ் நடைமுறை ரத்தா?.. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதி! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை