டிஜித்தளத்தில் கலா மாஸ்டர் சும்மா கிழி ..ஜித்து ஜில்லாடி, குட்டி ஸ்டோரி போட்டி அறிவித்தார்..

Advertisement

பல நூறு படங்களில் நடன இயக்குனர், ஆயிரக்கணக்கான மேடை நடன நிகழ்ச்சி கள், பல்வேறு பிரம்மாண்ட தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் என தனது கலை பயணத்தை தொடர்கின்ற கலா மாஸ்டர் தற்போது டிஜிட்டல் மீடியாவில் தனது பாதங்களை பதித்து புது அவதாரம் எடுக் கிறார். கலை ஆர்வம்மிக்க துடிப்புமிகு திறமைகளுக்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதே அவரது இப்புது கலை வடிவத்தின் நோக்கம். பிரம்மாண் டம் என்பதை அவரது நிகழ்ச்சிகளில் இயல்பாகவே புகுத்துவது கலா மாஸ்ட ருக்கு கை வந்த கலை. புது திறமைகளுக்கு எப்போதும் தோள் கொடுக்கும் கலா மாஸ்டர் இப்போது ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட யூ டியூப் சேனல்களை நிர்வகித்து வரும் டிரெண்ட்லௌடு எனும் நிறுவனத்துடன் இணைந்து துவக்கியுள்ள புத்தம் புது முயற்சி தான் கலா பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் மேடை.



டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும் மற்றும் அது சார்ந்த அனைத்து டிஜிட்டல் தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. கலா பிளிக்ஸ் சேனலின் அற்புதமான துவக்க விழா நடந்தது.

பிருந்தா மாஸ்டர், நடிகை குஷ்பூ சுந்தர், நடிகர் ஜெகன், சாண்டி மாஸ்டர், இயக்குனர் சமுத்திரகனி போன்ற பிரபலங்கள் கலா மாஸ்டருடன் நேரலை யில் பங்கு பெற்று கலாபிளிக்ஸ் எப்படி பட்ட அருமையான வாய்ப்பினை வழங்க வுள்ளது என்பதனை விரிவாக எடுத்துரைத் தனர். தொகுப்பாளினி பிரியதர்ஷினி அந்நிகழ்வினை திறம்பட தொகுத்து வழங்கினார்.

கலாபிளிக்ஸ் உங்களுக்காக வழங்கும்வாய்ப்புகள் பின்வருமாறு
சும்மா கிழி:
இது நடனத்தில் திறமையும், ஆர்வமும் மிக்கவர்களுக்கான வாய்ப்பு. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். நீங்கள் அனுப்பும் நடனங்களை கலா மாஸ்டரே பார்த்து வெற்றியாளர்களை தேர்வு செய்வார்.

குட்டி ஸ்டோரி:
இது ஓர் குறும்பட போட்டி. கலையுலகில் கால் பதிக்கும் கனவுடன் இருப்பவர்களுக் கான களம். எவர் வேண்டுமானாலும் பதிவு செய்து தங்கள் குறும் படங்களை அனுப்பி போட்டியில் பங்கு கொள்ள லாம். அவ்வாறு பெறப்படும் படங்களை பார்வையிடும் பிரபல இயக்குனர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு ஏதேனும் ஒரு ஓ டி டி தளத்தில் வெப்சீரிஸ் (அ) படம் வெளியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப் படும்.

ஜித்து ஜில்லாடி:
நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல திறமை கள் ஒளிந்து கிடக்கின்றது. அப்படி உங்க ளுக்குள் குடத்தினுள் விளக்காய் இருக்கும் திறமைகளை குன்றின் மேல் விளக்காய் ஒளிரச்செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். எப்படி திறமைக்கு வயது வரம்பு கிடையாதோ அதுபோல் இந்நிகழ்ச்சிக்கும் வயது வரம்பு கிடை யாது. எவரெல்லாம் இந்த வாய்ப்பை அழகுற கையாளுகின்றனரோ அவர்களின் தனித்திறமையை கலா பிளிக்ஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துசெல்லும். இவை மட்டுமல்லாது பிரபலங்கள் பங்கு பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் கலா மாஸ்டர் கலாபிளிக்ஸ் மூலமாக வழங்க உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>