திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு பாஜக ஆதரவு பத்திரிகையாளரிடம் சுங்க இலாகா அதிரடி விசாரணை

Bjp support tv channel official anil nambiar appeared before customs

by Nishanth, Aug 27, 2020, 18:05 PM IST

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அமீரக துணைத் தூதரின் முன்னாள் நிர்வாக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், அமீரக முன்னாள் பிஆர்ஓ சரத்குமார் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கைத் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகிய மூன்று மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷுடன் யார் யார் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர் என்பது குறித்து இந்த மூன்று அமைப்புகளும் விசாரணை நடத்தின. இதில் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல், அவரது உதவியாளர், பாஜக ஆதரவு மலையாள டிவி சேனலான ஜனம் டிவியில் பணிபுரியும் அனில் நம்பியார் என்பவர் உள்படப் பல முக்கிய பிரமுகர்கள் ஸ்வப்னா சுரேஷுடன் அடிக்கடி போனில் பேசி வந்தது தெரியவந்தது. தங்கக் கடத்தல் குறித்த விவரம் வெளியான அன்று ஸ்வப்னா சுரேஷுடன் அனில் நம்பியார் பேசினார்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா தீர்மானித்திருந்தது. இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷிடம் சுங்க இலாகா விசாரித்தபோது தனக்கும், அனில் நம்பியாருக்கும் உள்ள நெருக்கம் குறித்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அனில் நம்பினாருக்குச் சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி இன்று கொச்சியில் உள்ள சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அவரிடம் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது பதில்களில் சுங்க இலகாவுக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

You'r reading திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு பாஜக ஆதரவு பத்திரிகையாளரிடம் சுங்க இலாகா அதிரடி விசாரணை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை