காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??

how to cook andhra style pepper chicken in tamil

by Logeswari, Aug 27, 2020, 18:22 PM IST

ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-

சிக்கன் -அரை கிலோ

வெங்காயம்-1

இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

பச்சை மிளகாய்-3

தனியா தூள்-2 ஸ்பூன்

மஞ்சள் தூள் -1ஸ்பூன்

எண்ணெய்-தேவையான அளவு

கொத்தமல்லி -சிறிதளவு

மசாலா பொருள்கள் (பட்டை,ஏலக்காய்,கிராம்பு)

செய்முறை:-

முதலில் சிக்கனுக்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளவும்.சிக்கனை நன்கு தண்ணீரில் அலசி சிறிது துண்டுகளாக பிரித்து கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் சிக்கன் எடுத்து கொண்டு அதில் மஞ்சள் தூள்,எலுமிச்சை சாறு,இஞ்சி பூண்டு விழுது,உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,போன்ற பொருள்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.வதக்கியவுடன் மசாலாவில் ஊறவைத்த சிக்கன் மற்றும் தேவையான அளவு பெப்பர் சேர்த்து நன்றாக கிளறி விடவும் கடைசியில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

சிக்கனில் தண்ணீர் வற்றியவுடன் கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட வேண்டும்.

காரசாரமான ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெடி.. சூடாக பரிமாறி மகிழுங்கள். இந்த கொரோனா காலத்தில் புத்தம் புதிய சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.

You'r reading காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை