கொரோனாவின் தாக்கத்தால் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடுக்கத்தாலும் நாடே அனைத்து விதமான செயல்களும் முடிங்கிகிடந்தன. இது ஒரு புறமிருக்க இதன் தொடர் வினைகளால் இந்தியாவின் ஜிடிபி (GDP - GROSS DEMOSTIC PRODUCTION ) மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜீன் மாதத்தில் 23.9 சதவிகிதம் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த பின்னடைவு பொருளாதார வளர்சசியிலும் எதிரொலிக்கும்.
இதனால் வெகுஜன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரானாவில் இருந்தே இன்னும் மீளாத நிலையில் இந்த பொருளாதார வீழ்ச்சி நடுத்தர மக்களை மிகுந்த அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த சரிவிலும் வேளாண் சார்ந்த தொழில்களின் விகிதம் மட்டும் 3 % முன்னேற்றம் அடைந்துள்ளது.
அதேசமயம் கொரோனோ தொற்றின் தொடக்கமான சீனாவின் பொருளாதாரம் 3.2% வளர்ச்சியை நோக்கி உள்ளது இந்த நிதியாண்டில்.
ரஷ்யாவின் ஜிடிபி ஆனது இந்த காலாண்டில் 8% வீழ்ச்சி அடைந்துள்ளது எனினும் இது எதிர்ப்பார்த்ததை விட குறைவு என்கிறார்கள் வல்லுநர்கள்.