விவசாயிகளுக்கு தடையில்லா நிதி உதவி , நீர்ப்பாசன வசதி மற்றும் மின்சார வசதி - மத்திய அரசின் KUSUM திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்...!

Lets learn about the KUSUM scheme of the Central Government ...!

by Loganathan, Sep 1, 2020, 14:25 PM IST

இந்த திட்டம் கடந்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது . இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தடையில்லா நிதி உதவி , நீர்ப்பாசன வசதி மற்றும் மின்சார வசதியையும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தவது பற்றியும் அதனையும் ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுகிறது.

இந்த திட்டம் மூன்று பகுதிகளை கொண்டது

பகுதி - அ
10000 மெகாவாட் அளவிலான புதுப்பிக்க கூடிய ஆற்றலை இணைப்பதற்கான தரை வழி இணைப்பை ஏற்படுத்தம் நிலையங்களை அமைத்தல்.

பகுதி -ஆ

வேளாண் அமைப்புகளுக்கு தேவைப்படும் சூரிய சக்தியின் மூலம் இயங்கக்கூடிய 17.50 இலட்சம் பம்புகளை நிறுவுதல்

பகுதி - இ

சூரிய சக்தியின் மூலம் இயங்கக்கூடிய 10 இலட்சம் பம்புகளை கிரிட் மூலம் இணைத்து அதற்கு தேவையான ஆற்றல் மூலங்களையும் (சூரிய தகுடு ) உருவாக்குதல்.

மேற்கூறிய மூன்று பகுதிகளையும் இணைத்து சூரிய சக்தியின் மூலம் 25,750 மெகாவாட் மின்சாரத்தை 2022 க்குள் பெற வேண்டும் என இலங்கை நிர்ணயித்துள்ளது.மேலும் இதற்கு தேவையான நிதி ஆதாரங்களுக்காக ரூபாய் 34,422 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுதி அ மற்றும் பகுதி இ ஆகியவற்றின் மூலம் 1000 மெகாவாட் அளவிலான மற்றும் 1 இலட்சம் கிரிட் இணைப்புகள் உள்ள வேளாண் பம்புகளை விரைவாகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் அடிப்படையில் பகுதி -அ நிறுவேற்றப்படும்.

பகுதி -அ அடிப்படையில் புதுப்பிக்க கூடிய ஆற்றல் நிலையங்களின் மூலம் 500 Kw to 2 MW அளவுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய நிலையங்களை தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகள் , ஊராட்சி அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்தி அமைப்புகள் போன்றவற்றின் மூலம் நிலங்களில் நிறுவி கொள்ளலாம்.

உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு போக மீதியை DISCOM நிறுவனத்திடம் விற்கலாம்.

பகுதி -அ மற்றும் பகுதி -இ ன் பகுதிகளை முடிப்பதற்கு விவசாயிகளுக்கு நிதி உதவியாக மத்திய அரசு 30% , மாநில அரசு 30% உதவி செய்கிறது மீதமுள்ள 40 % நிதியில் 30 % வங்கி கடன் மூலமாகவும் மீதமுள்ள 10 % மட்டுமே விவசாயாகள் பங்களிப்பாக இருக்கும்.

மத்திய அரசு ஆனது வடகிழக்கு மாநிலங்கள் , சிக்கிம் ,ஜம்மு காஷ்மீர், ஹிம்மாச்சல் பிரதேசம் ,உத்தர்காண்ட் , அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சதீபகற்பம் போன்ற மாநிலங்களுக்கு 50 % நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் துர்காபூரில் உள்ள மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக்குழுமம் , மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் குடியிருப்பில் சூரிய மரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 12000 முதல் 15000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

ஒவ்வொரு சூரிய சக்தியின் மரம் 7.5 இலட்சம் மதிப்பிளானவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் இந்த சூரிய மரத்தை பெற்று கொள்ளலாம்.

You'r reading விவசாயிகளுக்கு தடையில்லா நிதி உதவி , நீர்ப்பாசன வசதி மற்றும் மின்சார வசதி - மத்திய அரசின் KUSUM திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்...! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை