வாகனங்களில் தனியாக செல்பவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை

No order issued on wearing mask while driving alone- health ministry

by Nishanth, Sep 3, 2020, 23:55 PM IST

கொரோனா பரவலை தொடர்ந்து பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார்கள் உள்பட சொந்த வாகனங்களில் தனியாக செல்பவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்று கூறி அவர்களிடமிருந்து போலீசார் அபராதம் வசூலிப்பதாக சுகாதார துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் டெல்லியில் கூறியது: வாகனங்களில் தனியாக செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார துறை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. தனியாக சைக்கிளில் செல்பவர்களும் முகக் கவசம் அணிய தேவையில்லை. ஆனால் உடற்பயிற்சிக்காக கூட்டமாக சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading வாகனங்களில் தனியாக செல்பவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை