எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. டி.ஆர்.பாலு, துரைமுருகனுக்காக ரஜினி டுவீட்!

by Sasitharan, Sep 3, 2020, 21:07 PM IST

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வேட்புமனு பெற்றுக் கொள்ளலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு மூத்த தலைவர் துரைமுருகனும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ``தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

முன்னதாக, பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவுடன், எவ.வேலு, ஆ.ராசா ஆகியோர் போட்டியிட உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், திமுக பொருளாளர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பதால் வேட்புமனு வாங்கப்போவதில்லை என்று ஆ.ராசா தெரிவித்து விட்டார். இதேபோல், கனிமொழி, எ.வ.வேலு ஆகியோரும் போட்டியிடவில்லை எனக் கூறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

More Tamilnadu News