பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதை இன்று காலை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியது. முடக்கியத்துடன் தொடர்ச்சியாக டுவிட்களை பதிவிட்டுள்ளனர். அதில், பிரதமர் நிவாரண நிதிக்கு பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சி மூலம் பணம் செலுத்தும் படி கூறியிருந்தனர். இதுதொடர்பாக உடனடியாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிரதமரின் தனிப்பட்ட பக்கத்தை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக டுவிட்டர் நிறுவனம் உறுதி அளித்தது.
காலை இந்த சம்பவம் என்றால் தற்போது, பிரதமரின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில், மர்ம மின்னஞ்சல் ஒன்று வந்ததால், தற்போது பிரதமர் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையின் தேசிய புலானய்வு முகமை அலுவலகத்துக்கு `Kill Narendra Modi' என்று குறிப்பிட்டு இந்த அச்சுறுத்தும் மின்னஞ்சல் வந்துள்ளது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, மர்ம மின்னஞ்சல் தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.