தகாத உறவு நாட்டாமை விதித்த வித்தியாசமான தண்டனை என்ன தெரியுமா?

by Nishanth, Sep 4, 2020, 14:40 PM IST

கிராமங்களில் தவறு செய்பவர்களுக்கு நாட்டாமை தீர்ப்புக் கூறும் சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் இப்போதும் நாட்டாமையின் தீர்ப்புக்கு மதிப்பு அதிகமாகும். என்ன தண்டனை கொடுத்தாலும் அதற்கு மக்கள் பணிந்து தான் ஆக வேண்டும். போலீஸ் எல்லாம் அப்புறம் தான்.....இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே தகாத உறவில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு நாட்டாமை அளித்த ஒரு நூதனமான தீர்ப்பு போலீஸ் வரை சென்றுள்ளது. இங்குள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள காப் என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை கையும் களவுமாகப் பிடித்த அப்பகுதியினர் இருவரையும் அந்த கிராமத்தின் நாட்டாமையின் முன் கொண்டு சென்று நிறுத்தினர். விசாரணை நடந்தது, இதில் இருவரும் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது. இருவருமே தவறை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து நாட்டாமை தீர்ப்பு வழங்கினார். அதாவது இரண்டு பேரும் பொது இடத்தில் நிர்வாணமாகக் குளிக்க வேண்டும்... இதுதான் அந்த நூதனமான தண்டனை.

மேலும் தகாத உறவில் ஈடுபட்ட ஆணிடமிருந்து ₹31 ஆயிரமும், பெண்ணிடமிருந்து ₹25 ஆயிரமும் அபராதம் வசூலிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தண்டனைக்குப் பணிந்தால் மட்டுமே ஊர் மக்களுடன் இணைந்து வாழ முடியும் என்றும் நாட்டாமை தீர்ப்பு வழங்கினார். இந்த விவரம் சிகார் மாவட்ட எஸ்பிக்கு தெரியவந்தது. இதுகுறித்து 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிகார் எஸ்பி ஹங்கன் தீப் சிங்லா கூறியுள்ளார்.

READ MORE ABOUT :

More India News