டிவியில் வருவதற்கு ஒருநாள் முன்பாகவே சீரியல்களை காணலாம்...!

by Chandru, Sep 4, 2020, 14:44 PM IST

டிவி சீரியல் அடிமைகள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். இன்று முடியும் சீரியலில் நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு சஸ்பென் ஸுடன் முடிக்கப்படுகிறது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாமல் சிலர் டென்ஷன் ஆகிவிடு வார்கள். மறுநாள் டிவியில் அதை பார்த்த பின்புதான் நிம்மதி அடைவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இனிப்பான செய்தியை ஜீ5 கிளப் தளம் ஏற்படுத்தி தந்திருக்கிறது.


இதுகுறித்து ரசிகர்களுடன் ஸூம் வீடியோ மூலமாக நேரலையில் கலந்துரையாடிய சின்னத்திரை நட்சத்திரங்கள் விஷ்ணு விஜய், ஆயிஷா, ஸ்ரீகுமா மற்றும் நக்‌ஷத்ரா ஆகியோர், ஜீ5ன் இந்த முடிவுவை பாராட்டி உள்ளனர்.


ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சத்யாவில், ஆயிஷாவுடன் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் விஷ்ணு விஜய் பேசுகையில், "இதுவொரு அற்புதமான முடிவு. எனக்கு ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல ரசிகர் களுக்கு உண்டு. அப்படிப்பட்டவர் களுக்கு, ஒரு நாள் முன்னரே அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஜீ5 க்ளப் தரும். கண்டிப்பாக ஜீ5 கிளப்பை பலர் தேர்வு செய்வார்கள் என்று உறுதியுடன் கூறுகிறேன்" என்றார்.


விஷ்ணு விஜய்யுடன் நடிக்கும் ஆயிஷா, "ஜீ 5ன் இந்த முடிவு, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சாதகமான ஒரு சூழலை உருவாக்கும். சந்தாதாரர்கள், அவர்களுக்குப் பிடித்தமான தொடர்களின் கதை யோட்டம் குறித்து, தொலைக்காட்சியில் வருவதற்கு ஒரு நாள் முன்னரே தெரிந்து கொள்ளலாம்" என்றார்.


இன்னொரு பிரபல தொடரான யாரடி நீ மோகினியில் முதன்மை கதாபாத்திரங் களில் நடிக்கும் நடிகர்கள் ஸ்ரீகுமாரும், நக்‌ஷத்ராவும் கூட, இதே உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


"ஜீ5-ன் அற்புதமான முடிவு இது. இந்த சந்தாவுக்கான கட்டணம் தான் என்னை அதிகம் ஈர்த்துள்ளது. ஒரு வருட சந்தா வெறும் ரூ.365 மட்டுமே. அதாவது ஒரு நாளைக்கு வெறும் ஒரு ரூபாய் என்கிற கணக்கு. அதன் மூலம் அத்தனை தொடர் களையும், நிகழ்ச்சிகளையும் ஒரு நாள் முன்னரே பார்க்க முடியும்" என்கிறார் ஸ்ரீகுமார்.


இந்த புதிய அறிமுகத்தை வரவேற்பதாகக் கூறும் நக்‌ஷத்ரா, "ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை ஒரு நாள் முன்னரே பார்க்கும் வாய்ப்பைத் தரும் இந்த ஜீ5 கிளப் மிகவும் புதுமை யான முடிவு. கண்டிப்பாக இதைப் பலர் வரவேற்பார்கள்" என்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை