புரட்சி தலைவர் எம்ஜிஆர் சினிமாவில் நடித்து அரசியல் கொள்கைகளை பரப்பினார். பின்னர் திமுகவில் ஈனைந்து கட்சி பணியார்றினார். ஒரு கட்டத்தில் கட்சியி லிருந்து நீக்கப்பட்ட அவர் வெளியில் வந்து அதிமுக என்ற தனிக் கட்சியை தொடங்கி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.
எம்ஜிஆரை போலவே ஆந்திராவில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் என்.டி.ராமாராவ். எம்ஜிஆரின் நல்ல நண்பரும் ஆவார். கர்ணன் உள்ளிட்ட சில பக்தி படங்களில் ராமாராவ், கிருஷ்ணர் வேடம் ஏற்று நடித் தார். அவரது நடிப்பும் வேட பொருத்த மும் தத்ரூபமாக இருந்ததால் ஆந்திர ரசிகர்கள் அவரை தேவுடா (கடவுள்) என்றே அழைத்தனர். அவர் எங்காவது வெளியில் சென்றால் அவருக்கு பூஜை புணஷ்காரம் செய்தனர்.
ஒரு கட்டத்தில் தெலுங்கு தேசம் என்ற கட்சி தொடங்கி ஆந்திர மாநில சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆந்திரா வின் முன்னாள் முதல் அமைச்சர் ஆனார். எம்ஜி ராமச்சந்திரன் என்ற பெயர் எப்படி எம்ஜிஆர் ஆனதோ அதுபோல் என்.டி. ராமாராவ் என்ற இவரது பெயரும் என் டி ஆர் ஆனது. இவரது வாழ்க்கை வரலாறு 10-ம் வகுப்பு தெலுங்கு பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவுவது பற்றியும், பாஸ்கர்ராவ் அவரது ஆட்சி கவிழ்ப்பை நடத்திய பின்னர் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற் காக என் டி ஆர் நடத்திய போராட்டம் பற்றியும் இந்த பாட திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
பாட புத்தகத்தில் என் டி ஆர் வாழ்க்கை சேர்க்கப்பட்டதற்கு என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், என்.டி.ராமராவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.