கேரளாவில் 2 மாதங்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை

by Nishanth, Sep 14, 2020, 20:53 PM IST

கேரளாவில் அடுத்த மாதத்திலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.


கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைனில் தான் வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர். சில நாடுகளில் பள்ளிகள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்ற போதிலும் இந்தியாவில் இப்போதைக்கு பள்ளிகளை திறக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் நோய் பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் அக்டோபர் மாதத்திலும் கேரளாவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை. மத்திய அரசும் இதே நிலையைத் தான் எடுத்துள்ளது என்று கூறினார்.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை