பழமை தின்பண்டமான பொரி உருண்டை செய்வது எப்படி??வாங்க சமைக்கலாம்

how to make pori urundai in tamil

by Logeswari, Sep 14, 2020, 20:37 PM IST

விழா காலம் அன்று அதுவும் குறிப்பாக கார்த்திகை தீபத் திருநாளில் இறைவனை வழிப்பட இனிப்பினால் ஆன பொரி கடலையை தயாரித்து மகிழ்வார்கள்.இது பழமையான தின்பண்டங்களுள் ஒன்று.. இதில் உள்ள ஆரோக்கியம் பல மடங்கு உயர்வானது.இதை உண்டு தான் அந்த கால மக்கள் இன்றும் வலிமையாக உள்ளனர்.இந்த ரெசிபி எப்படி செய்வது குறித்து இனி பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-

பொரி-500 கிராம்

வெல்லம்-1 கப்

ஏலக்காய்-3

தேங்காய்-1/2 கப்

தண்ணீர்-1/2 கப்

வேர்க்கடலை-1/2 கப்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை நறுக்கி பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.அடுத்து அறை கப் தேங்காயை துருவி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானவுடன் அதில் வேர்கடலையை வறுத்து கொள்ள வேண்டும்.

பெரிய பாத்திரத்தில் பொறி, வேர்க்கடலை, தேங்காய்,ஏலக்காய் ஆகியவை சேர்த்து அதனுடன் வெல்ல பாகை ஊற்றி நன்கு கிளறவும்.

பின்னர் உருண்டையாக பிடித்தால் ஆரோக்கியமான பொரி உருண்டை ரெடி.இதனை பத்தே நிமிடத்தில் செய்து விடலாம்..



You'r reading பழமை தின்பண்டமான பொரி உருண்டை செய்வது எப்படி??வாங்க சமைக்கலாம் Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை