70வது பிறந்தநாள்.. பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வாழ்த்து..

by எஸ். எம். கணபதி, Sep 17, 2020, 09:14 AM IST

பிரதமர் மோடி இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ராகுல்காந்தி உள்பட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 70வது பிறந்த நாள். இதையொட்டி, நேபாள பிரதமர் சர்மா ஒளி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்தியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். இந்தியாவை வலிமை மிக்க நாடு ஆகவும், பாதுகாப்பான நாடு ஆகவும், தன்னிறைவு பெற்ற நாடு ஆகவும் இருப்பதற்காக அவர் பாடுபட்டு வருகிறார். அவரது தலைமையில் நான் பணியாற்றும் பாக்கியம் பெற்றுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


More India News

அதிகம் படித்தவை