விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் திடீர் மரணம்.. கோலிவுட்டில் அடுத்தடுத்து அதிர்ச்சி..

by Chandru, Sep 17, 2020, 09:20 AM IST

விஜய் நடித்த படம் வேட்டைக்காரன். இதில் ஹீரோயினாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த குருவி, பைரவா படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். வேட்டைக்காரன் படம் கடந்த 2009ம் ஆண்டு திரைக்கு வந்தது.இயக்குனர் பாபு சிவன் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்குச் சிறுநீரகம். கல்லீரல் செயலிழந்ததாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

பாபுசிவனுக்கு கொரோனா தொற்று இல்லை. அவருக்கு வயது 56.பாபு சிவன் திடீரென்று இறந்ததை அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.சில தினங்களுக்கு முன்புதான் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பில் மரணம் அடைந்தார். அடுத்த சில நாட்களில் பிரபல இயக்குனர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை