காவலர் தேர்வுக்கான அழைப்பை வெளியிட்டது தமிழக அரசு !

Government of Tamil Nadu has issued a call for police selection!

by Loganathan, Sep 17, 2020, 10:00 AM IST

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்

* காவல்துறை - இரண்டாம் நிலை காவலர் ( மாவட்ட / மாநகர ஆயுதப்படை ) - 685 ( ஆண்கள் /பொது ) , 3099 (பெண்கள் / திருநங்கைகள்) என இந்த பிரிவில் மொத்தம் 3784 காலி பணியிடங்களையும்

* இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 6545 (ஆண்கள்/பொது ) காலி பணியிடங்களையும் அறிவித்துள்ளது.

* சிறைத் துறை சார்பில் இரண்டாம் நிலை சிறைக்காவலர் 112 (ஆண்கள் / பொது ) மற்றும் 7 ( பெண்கள் / திருநங்கைகள் ) என 119 காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.

*தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீயணைப்பாளுக்கு 458 ( ஆண்கள்/பொது ) என அறிவிப்புகளை அறிவித்துள்ளது.

இதனைத் தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 பெண்கள் ) மற்றும் ( சிறைத்துறை 10 பெண்கள் )

என மொத்தம் 10,906 காலி பணியிடங்களைத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

சம்பளம் : 18200-52900

கல்வி தகுதி:
* 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

*கல்வித் தகுதிக்கு இணையான கல்வி சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வயது :
விண்ணப்பதாரர் 01.07.2020 அன்று 18 வயது நிரம்பியவராகவும் , 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

*பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பு 26 வயது .

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 29 வயது .

*திருநங்கைகள் -29 வயது வரம்பு

* விதவைகள் -35 வயது வரம்பு

இட ஒதுக்கீடு :

தமிழக அரசின் வகுப்புவாரி இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும்.

சிறப்பு ஒதுக்கீடு :

முன்னாள் இராணுவத்தினர்/ மத்திய துணை இராணுவப் படையினர் போன்றோருக்கு 5% இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

ஆதரவற்ற விதவைகளுக்கு -3%

விளையாட்டு பிரிவினருக்கு -10% சிறப்பு ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

தேர்வு முறைகள்

*எழுத்துத் தேர்வு -80 மதிப்பெண்கள்
*உடற்திறன் போட்டிகள் -15 மதிப்பெண்கள்
*சிறப்பு மதிப்பெண்கள்-5 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 28 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணமாக ரூ.130 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் நாள் 26.09.2020

மேலும் தெரிந்து கொள்ள www.tnusrbonline.org

You'r reading காவலர் தேர்வுக்கான அழைப்பை வெளியிட்டது தமிழக அரசு ! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை