ஐபிஎல்லை முன்னிட்டு ஜியோவின் அதிரடி ஆஃபர்... டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவசம்

by SAM ASIR, Sep 17, 2020, 10:11 AM IST

ஓராண்டுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இணைந்த திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. ஐபிஎல் 2020 தொடரை முன்னிட்டு ஜியோ பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.தினமும் 2 ஜிபி அதிக வேக டேட்டா கொண்ட 56 நாள்களுக்கான ரூ.598/- திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ சந்தாதாரர்களுடன் பேசுவதற்குக் கட்டணம் இல்லை. ஏனைய நிறுவன வாடிக்கையாளர்களுடன் 2000 நிமிடங்கள் கட்டணமில்லாமல் பேசலாம். தினமும் 100 குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்) இலவசம்.

ஒரு நாளில் 2 ஜிபிக்கு மேலான டேட்டாவின் வேகம் 64 Kbpsக்கு கிடைக்கும். இது தவிர ஓராண்டுக்கு ரூ.399/- மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.முன்னதாக 56 நாள்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன் ரூ.499/- ஒரு திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. அதில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் இல்லை. ரூ.777/-க்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் 84 நாள்களுக்குத் தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இதில் ஜியோ-ஜியோ அழைப்புகளுக்குக் கட்டணமில்லை. வேறு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடன் 3000 நிமிடங்கள் இலவசமாகப் பேசலாம். இத்திட்டத்திற்கு 100 குறுஞ்செய்திகள் இலவசம்.டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்கள் விஐபி ஆண்டு மற்றும் பிரீமியம் சந்தாதாரர்கள் எல்லா ஐபிஎல் 2020 போட்டிகளையும் நேரடியாகப் பார்க்கலாம் என்று அறிவித்துள்ளதால் ஜியோவின் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Technology News