மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான செலவுகள் அரசின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 2.15 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக இணையதளங்களில் பணியாற்றுவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுகாதாரத்துறைக்கு ஆன செலவு குறித்த புள்ளி விவரங்களை நேற்று அவர் வெளியிட்டார்.
பதினைந்தாவது நிதி கமிஷன் மத்திய சுகாதாரத் துறைக்கான செலவைக் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 2.5 சதவீத அளவுக்கு சுகாதாரத்துறை செலவுகள் உயரும் என்று தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக சுகாதாரத்துறை செலவுகள் உயர்த்தப்பட வேண்டும் என்று கருத்து கூறப்பட்டு வருகிறது ஆனாலும் மத்திய அரசு சுகாதாரத்துறை செலவுகளை உயர்த்தாமல் பிடிவாதமாக உள்ளது.
ஆனால் இந்த முறை மத்திய அரசின் சுகாதாரத்துறை செலவு கணிசமாக உயரும் என்று அவர் தெரிவித்தார்சுகாதாரத்துறை செலவுகள் 2.5 சதவீதமாக உயர்வது ஒட்டு மொத்த செலவுத் தொகையில் 377 சதவீத உயர்வைக் குறிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு எம்பிபிஎஸ் வகுப்புக்காக 29 ஆயிரத்து 185 இடங்களை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.