அதர்வாவின் “குருதி ஆட்டம்” இறுதி கட்டத்துக்கு வந்தது..

by Chandru, Sep 28, 2020, 16:41 PM IST

அதர்வா நடிப்பில் படம் திரைக்கு வந்து நாளாகிவிட்டது. அடுத்து இவர் நடிக்கும் படம் குருதி ஆட்டம் பிரியா பவானி ஹீரோயினாக நடிக்கிறார்.2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர் டெயின்மெண்ட் நிறுவனர் டி. முருகானந்தம் அஜீத்குமார், விஜய், தனுஷ், முன்னணி நடிகர்கள் நடித்த 148 படங்களை விநியோகம் செய்திருக்கிறார். இவர் முதல் முறையாக “குருதி ஆட்டம்” படம் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில், எட்டு தோட்டாக்கள் புகழ் ஶ்ரீகணேஷ் இயக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது: தயாரிப்பாளர் டி முருகானந்தம் உடனான இந்த திரைப்பயணம், கற்பனைக்கும் அப்பாற்பட்டது. “குருதி ஆட்டம்” திரைக்கதை மீதும், என் மீதும் அவர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நான் என்றும் மறக்க மாட்டேன். அவர். 8 தோட்டாக்கள் பார்த்த பிறகு எனக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார். ஆனால் ஒரு தயாரிப்பாளராக எந்த ஒரு சிறு விசயத்திலும் தலையிடாமல், படைப்பில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார். இது எனக்கு பெரும் பொறுப்புணர்வைத் தந்தது. நான் படத்தை மேலும் மேலும் வெகு கவனமுடன் உருவாக்க இதுவே காரணம். மேலும் நடிகர் இப்படத்தின் நாயகன் அதர்வா ஒரு மிகச்சிறந்த நடிகர். எனக்குத் தொடர்ந்து உற்சாகம் தந்து, நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தார். அவர் ஒரு சகோதரர் போலத்தான் என்னிடம் நடந்து கொண்டார்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் படத்தின் இசை, டிரெய்லர், பட வெளியீடு குறித்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றார்.குருதி ஆட்டம் படத்தைத் தொடர்ந்து மிக முக்கியமான, தரமான படங்களையும் அடுத்தடுத்து தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் டி. முருகானந்தம். YouTube புட் சட்னி புகழ் ராஜ் மோகன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாகக் கொண்ட, காமெடி கமர்ஷியல் படத்தை இரண்டாவது படைப்பாகத் தயாரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தமிழின் முக்கிய இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் “பிசாசு 2” படத்தின் அறிவிப்பே கோலி வுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழில் சில முக்கிய படைப்புகளின் உரிமையைப் பெற்று விநியோகம் செய்யவுள்ளது .தயாரிப்பாளர் டி. முருகானந்தமின் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

மாஸ்டர் பீஸ் புரடக்ஷன் நிறுவனத்திடமிருந்து கயல் ஆனந்தி, ரோகித் ஷ்ராஃப் நடிப்பில் உருவாகும் “கமலி ஃபுரம் நடுகாவேரி (kamali From Nadukaveri ) படத்தின் தமிழக திரை வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கிறது. மேலும் ஆகாஷ் பிரபு, ஜானகி, ஐஸ்வர்யா முருகன், அருண் மற்றும் வித்யா பிள்ளை நடிக்கும் “மாய பிம்பம்” படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது. மேலும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரும் வெளியீடாக ஜெயம் ரவி நடிப்பில் “பூமி” படம் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டின் ஏழு பகுதிகளில் இப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். அடுத்ததாக இருட்டறையில் முரட்டுக் குத்து படப்புகழ் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் அதன் அடுத்த பாகமாக உருவாகும் “இரண்டாம் குத்து” படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News