ஏலக்காய் ஏலம்..இனி ரெண்டு தரம் ஏலம்..

Cardamom auction..Awesome two times auction ..

by Balaji, Oct 3, 2020, 12:10 PM IST

தமிழகம் மற்றும் கேரளாவில் தினசரி ஒருமுறை மட்டுமே நடந்த ஏலக்காய் ஏலம் இனி இரண்டு முறை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வாசனைப் பெயர்களில் ஒன்றான ஏலக்காய் தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேனி மாவட்டம் அகமலை, மேகமலை ஆகிய இடங்களில் ஏலக்காய் பயிரிடப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் மிளகாய்கள் மத்திய அரசு நிறுவனமான தினசரி ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும்.மத்திய அரசுக்கு அதிக அளவிலான அன்னிய செலவாணியை ஈட்டித் தருவதில் ஏலக்காய் முக்கிய இடம் பெற்றுள்ளது.

கேரள மாநிலம் புத்தடி என்ற இடத்திலும், தேனி மாவட்டம் போட்டியிலும் இ ஆக்சன் என்ற அடிப்படையில் ஏலம் விடப்பட்டு வர்த்தகம் வியாபாரம் நடைபெறுகிறது. ஸ்பைசஸ் போர்டு சார்பில் 13 தனியார் நிறுவனங்கள் இந்த ஏல விற்பனையை நடத்துகின்றன ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து வேலை நாட்களிலும் தினமும் காலை மற்றும் மதியம் என இரண்டு முறை இந்த ஏலம் நடைபெறும். இந்த ஏலக்காய் வர்த்தகத்தில், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்துகொள்வார்கள்

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் ஏலக்காய் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த மே 28, ஜூன் 3 முதல் ஏலக்காய் ஏலம் தொடங்கியது. இதில் புத்தி, போடி ஆகிய இடங்களில் தினமும் ஒரு முறை மட்டுமே ஏலம் நடத்தப்பட்டது.இந்த நிலையில் கொரானா ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் ஏலக்காய் வர்த்தக நடவடிக்கைகளில் ஸ்பைசஸ் போர்டு சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி புத்தடி, போடி ஆகிய இரண்டு இடங்களில் தினமும் காலை மற்றும் மதியம் என இரண்டு தடவை ஏலக்காய் ஏலம் நடைபெறுகிறது.8 மாதங்களுக்குப் பிறகு ஏலக்காய் ஏலம் இம்மாத துவக்கத்திலிருந்து காலை மற்றும் மதியம் என இரண்டு முறை நடைபெறுகிறது.

You'r reading ஏலக்காய் ஏலம்..இனி ரெண்டு தரம் ஏலம்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை