மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் : 10 தொழிற்சங்கங்கள் முடிவு.

10 unions announce Nationwide strike on November 26 to condemn the federal government:

by Balaji, Oct 4, 2020, 14:42 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் துறை சட்டங்களை எதிர்த்து வரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த 10 மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் துறை சட்டங்கள் வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்த பல்வேறு தொழிற்சங்கக்கங்கள் திட்டமித்தான். இதற்காக கடந்த காந்தி ஜெயந்தி தினத்தன்று மத்திய தொழிற்சங்கங்கள் காணொளி முறையில் ஆலோசனை நடத்தின.
அந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு அவசரமாக இயற்றி அமலுக்கு கொண்டு வந்த மூன்று 3 தொழிலாளர் துறை சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், ஏஐடியுசி மற்றும் சி ஐ டி யு. ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த செய்ய முடிவு செய்துள்ளது.


இது குறித்து ஐஎன்டியுசி தலைவர் ஜி சஞ்சீவ ரெட்டி கூறுகையில், தொழிலாளர் துறையை பொருத்தமட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட மோடி அரசு மிக மோசமாக நடந்து கொள்கிறது 60 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை மோடி அரசு பறித்து கொண்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்க்கை தான் பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் இருந்த வாழ்க்கை தரத்தை விட மோசமாக உள்ளது . இந்த நேரத்தில் எல்லா தொழிற் சங்கங்களும் இணைந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதற்காகவே இந்த வேலை நிறுத்தம் என்று தெரிவித்தார்.
தொழிலாளர் துறை சட்டங்களைப் பொறுத்தவரை உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் நலன்களைப் பற்றித்தான் மோடி அரசு முதலில் கவலைப்படுகிறது. இறுதியாக பிரிவு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பிரிவி கடைசியில் தான் கவனம் செலுத்துகினறது என்று ஏஐடியுசி பொதுச் செயலாளரரானா அமர்ஜித் தெ ரிவித்துள்ளார்.


சிஐடியு பொதுச்செயலாளர் தபன் சென், இது குறித்து கூறுகையில் மத்திய அரசு புதிய சட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான வேலைநிறுத்த உரிமையைப் பறித்து வருகிறது. கொ ரோனா காலத்தில் தொழிலாளர் துறை சார்பில் தொழிற்சங்கங்கள், வருமான வரி செலுத்தாத தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பால்வெறி நிவாரணத் திட்டங்களை வகுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவற்றையெல்லாம் அரசு கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் அதற்குப் பதிலாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை மேலும் பறிக்கக்கூடிய சட்டங்களையும் தொழிலாளர் விரோத சட்டங்களையும் அரசு கொண்டுவந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை எதிர்ப்பதே கொள்கை என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளார். நவம்பர் 26 ஆம் தேதி 10 தொழிற் சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் நடக்க உள்ளது. இது முதற்கட்ட போராட்டம் தான். . பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

You'r reading மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் : 10 தொழிற்சங்கங்கள் முடிவு. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை