தமிழ் சினிமாவுக்கும் எழுத்தாளர்களுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. எழுத்தாளர் சுஜாதா உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் திரை படங்களுக்கும் பணியாற்றி தங்களது அரிய பங்களிப்பை தந்திருக்கின்றனர். கமல்ஹாசன், ஷங்கர், வெற்றிமாறன் , மிஷ்கின் போன்ற ஒரு சிலர் எழுத்தாளர்களின் பங்களிப்பை தங்களது படங்களில் பயன்படுத்தி பெருமை சேர்த்திருக்கின்றனர்.
எழுத்தாளராகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் பலருக்கும் தெரிந்தவர் சச்சி என்கிற கி.ஆ.சச்சிதாநந்தன். இவர் நாடோடி போல சுற்றித் திரிந்திருக்கிறார். `சாமுவேல் பெக்கட்'டின் `கோடோவிற்காக காத்திருத்தல்' என்ற நாடகம் நோபல் பரிசுபெற்றது இதனை தம்ழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார். மேலும் தாகூர் எழுதிய நாடகம் சித்ரா, ரோசா லக்சம்பெர்கின் சிறைக் கடிதங்கள், பனிமலைப் பிரதேசத்துக் கதைகள், மராட்டிய நாடகம் கல்மாளிகை போன்ற புகழ் பெற்ற நாடகங்களை தமிழில் மொழி மாற்றம் செய்தவர் சச்சிதானந்தம். அவர் மரணம் அடைந்த தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது.
எழுத்தாளர் சச்சிதானந்தம் மறைவுக்கு இயக்குனர் மிஷ்கின் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். 'ஆசான், தத்துவ ஆசிரியர், அறிஞர், எழுத்தாளர், நாடோடி, கதை சொல்லி, இயற்கை காதலன் சச்சி அவர் உடலை விட்டுப் பிரிந்து இயற்கை யோடு கலந்தார். சச்சி, இந்த பூமியில் நடப்பதை நிறுத்தி பால் வெளிகளுக்குப் பறந்து செல்லுங்கள். உங்களின் ஓய்வற்ற கால்களை நன்றியுடன் முத்தமிடுகிறேன்' என தெரிவித் துள்ளார்.