உடல் சற்று வெயிட்போட்டால் உடனே டயட் கண்ட்ரோல் செய்கிறேன் என்ற பெயரில் ருசிபார்ப்பதுபோல் ஒரு முறை டேஸ்ட் செய்துவிட்டு சாப்பிடாமல் பலர் நிறுத்தி விடுகின்றனர். இந்த விஷயத்தில் அதிகம் ரிஸ்க் எடுப்பது சினிமா நடிகர், நடிகைகள்தான். சில வருடங்களுக்கு முன் சிக்ஸ் பேக் மோகம் ஏற்பட்டு நடிகர்கள் சூர்யா. விஷால் முதல் சூரி வரை சிக்ஸ் பேக் வைத்தனர். இதற்காக கடுமையான உணவு கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும். தண்ணீரை ஒரு சொட்டு, இரண்டு சொட்டு என் அவுன்ஸ் கணக்குல்தான் குடிப்பார்களாம் இதனால் சிலர் கிட்னியில் கல் போன்ற பிரச்னைக்குள்ளானார்கள்.
அதன்பிறகு கிக்ஸ்பேக் மோகம் குறைந்தது. நடிகைகள் பலர் உடல் தோற்றத்தை மெலிதாக்குகிறேன் என்று சொல்லி வயிற்றை காயப்போடுகிறார்கள். இதனால் பல வித கோளாறுகளுக் குள்ளாகிறார்கள். தற்போது ஒரு நடிகை டயட் கண்ட்ரோல் கடைபிடித்தது உயிரையே இழந்த சோக சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்தியில் லைப் கி டதோ லக் க்யி மற்றும் மைன் கிருஷ்னா ஹூன் போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் பல இசை ஆல்பங்களிலும் நடனம் ஆடி இருக்கிறார் மிஸ்டி முகர்ஜி. இவர் உடல்தோற்றத்தை பராமரிக்க கேடோ டயட் என்ற உணவு கட்டுப்பாடு முறையை கையாண்டு வந்தார். இதில் அவருக்கு கிட்னி ஃபெயில்யர் (சிறுநீரக செயலிழப்பு) ஏற்பட்டதாக கூரப்படுகிறது. இதில் அவரது உடல்நிலை ஆபத்தான நிலைக்கு சென்றது. அவரை பெங்களுரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் நேற்றுமுன் தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 27. அவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது.
நடிகை மிஸ்டி முகர்ஜினியின் திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு இந்தி நடிகர் காஷ்மீரா ஷா இரங்கல் தெரிவித்திருக்கிறார். மிஷ்டி கடந்த 2012ம் ஆண்டு லைப் கி தோ கயி படத்தில் அறிமுகமானார். பிறகு மையின் கிரிஷ்ணா ஹுன், கோவிந்தா ஆலே ரே போன்ற பல இந்தி படங்களில் நடித்திருப்பதுடன், சில பெங்கால் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை திரையுலக பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் ஒட்டு மொத்த திரையுலகையும் கவலையில் ஆழ்த்து உள்ளது. கொரோனா காலகட்டத்தில் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத், ரிஷிகபூர், இர்பான் கான், பாடகர் எஸ்பி,.பாலசுப்ரமணியம் சிரஞ்சீவி சார்ஜா, வடிவேல் பாலாஜி தற்போது 27 நடிகை மிஸ்டி முகர்ஜி என மரணங்கள் தொடர் கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது,