சமூக இணையதளங்களில் ஆர்வமில்லாத பெண் தேவை திருமணம் ஆகாமலே இறக்கவேண்டி வரும் என கமெண்ட்

Advertisement

சமூக இணையதளங்களில் ஆர்வமில்லாத பெண் தேவை என வந்த விளம்பரத்திற்கு ருசிகர கமெண்டுகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக மணமகன் தேவை, மணமகள் தேவை விளம்பரங்களை நாம் நாளிதழ்களில் பார்த்திருப்போம். அதில் பொதுவான சில வாசகங்கள் தான் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். மணமகன் தேவை என்றால், நல்ல வேலை, நல்ல உயரம், ஜாதி உட்பட விவரங்கள் தான் இடம் பெற்றிருக்கும். மணமகள் தேவை விளம்பரத்தில், நல்ல அழகு, சிவந்த நிறம், ஜாதி, வேலை உள்பட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அபூர்வமாக சில சமயங்களில் சில ருசிகரமான கோரிக்கைகளும் அந்த விளம்பரங்களில் இருக்கும்.


அப்படி ஒரு ருசிகரமான மணமகள் தேவை விளம்பரம் தான் இப்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு ஆங்கில பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தை ஐஏஎஸ் அதிகாரியான நிதின் சாங்க்வான் என்பவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 'முற்போக்குவாதிகளான மணமகன் மற்றும் மணமகள்களே... இந்த விளம்பரத்தை சற்று கவனியுங்கள், வாழ்க்கை துணையை தேடுவதற்கான நிபந்தனைகள் மாறிவருகிறது' என்ற குறிப்புடன் சாங்க்வான் அந்த விளம்பரத்தை பகிர்ந்துள்ளார்.


'பார்ப்பதற்கு அழகான, அடக்கமான, நல்ல குணமுள்ள, உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஆராய்ச்சியாளருமான, சொந்தமாக வீடும், காரும் உள்ள, பெற்றோர் உயிருடன் உள்ள கமர்புகூர் பகுதியை சேர்ந்த 37 வயது வாலிபருக்கு மெலிந்த, அழகும், நல்ல குணமும், உயரமும் கொண்ட பெண் தேவை. பெண் சமூக இணையதளங்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது'.... இப்படி போகிறது அந்த மணமகள் தேவை விளம்பரத்தில் உள்ள வாசகங்கள்.


சமூக இணையதளங்களில் இளையதலைமுறையினர் மூழ்கிக் கிடக்கும் இந்த காலகட்டத்தில் வந்துள்ள இப்படி ஒரு விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு ருசிகரமான பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. 'பெண்ணை கண்டுபிடிக்க இவர் நிச்சயம் பெரும் சிரமப்படுவார். ஒருவேளை இவர் திருமணம் ஆகாமலேயே இறக்க வேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்று ஒருவர் கமெண்ட் தெரிவித்துள்ளார். 'தேவலோகத்தில் தான் இப்படி ஒரு பெண் கிடைப்பார்' என்று இன்னொருவர் கமெண்ட் தெரிவித்துள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து இதுபோன்ற பல ருசிகரமான கமெண்டுகள் டுவிட்டரில் குவிந்து வருகின்றன.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

READ MORE ABOUT :

/body>