பிளாஸ்மா சிகிச்சை பிரயோஜனமில்லையாம்..

Plasma treatment Not worth it. For those affected by corona infection

by Balaji, Oct 7, 2020, 18:21 PM IST

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பரவி மக்களை வதைக்கும் ஓரணா தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் , அந்த சிகிச்சையால் எதிர்பார்த்த அளவுக்குப் பலனில்லை என ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்கும் முறை, பல்வேறு நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. , கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோரின் ரத்த அணுக்களை எடுத்து, பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா தெரபி எனப்படும் சிகிச்சை முறையாகும்.இந்த சிகிச்சைக்குச் செலவு அதிகம் என்றபோதிலும், அதனால் குணமடைந்து வருபவர்கள் அதிகம் எனத் தகவல்கள் வெளியானது . டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உள்படப் பல முக்கிய பிரமுகர்களுக்குக் கூட பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பிளாஸ்மா தெரபி சிகிச்சையால், எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைக்கவில்லை. கொரேனா மூலமான இறப்பு விகிதத்தை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்க்கவா மிதமானது முதல் தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் இறப்பு விகிதத்தை, கட்டுப்படுத்த பிளாஸ்மா தெரபி5 சிகிச்சை, எந்தவித பலனையும் அளிக்கவில்லை என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.குதிரையிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்திற்கான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You'r reading பிளாஸ்மா சிகிச்சை பிரயோஜனமில்லையாம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை