இலங்கை தாதா அங்காட லொக்கா (36) வின் காதலி இலங்கை செல்ல தடை.

Sri Lanka Dada Angada Lokas girlfriend banned from going to Sri Lanka

by Balaji, Oct 11, 2020, 15:47 PM IST

இலங்கை தாதாவான அங்காட லொக்கா (36) வின் காதலி இலங்கை செல்ல நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இலங்கையின் நிழல் உலக தாதா அங்காட லொக்கா. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர் எப்படியோ தமிழகம் வந்து கோவையில் தங்கி இருந்துள்ளார். கடந்த ஜூலை 3-ந் தேதி இவர் திடீரென இறந்து போனார். மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டு அவரின் உடல் கோவையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

அங்காட லொக்கா வின் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார்
இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் அங்காட லொக்காவின் காதலியான இலங்கையை சேர்ந்த அமானி தான்ஜி (27) மற்றும் மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி (38), ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்ட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அமானி தான்ஜி மற்றும் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவரும் கடந்த 7-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வகையில் அங்காட லொக்காவின் காதலியான அமானி தான்ஜி சொந்த ஊரான இலங்கைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் a அவர் கோவையில் தங்கி இருக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவையில் இறந்தது அங்காட லொக்கா தானா? என்பதை கண்டறிய முக்கிய ஆதாரமாக டி.என்.ஏ. பரிசோதனை உள்ளது. எனவே அங்காட லொக்காவின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது எடுக்கப்பட்ட உடற் கூறுகள் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவரின் உறவினருக்கு டி.என்.ஏ. செய்யப்பட் டது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. . அவ்வாறு டி.என்.ஏ. பரிசோதனை செய்து இருந்தால் அவர்களின் பரிசோதனை முடிவும், அங்காட லொக்காவின் டி.என்.ஏ. முடிவும் ஒன்று போல் இருந்தால் தான் இந்த வழக்கில் தீர்வு கிடைக்கும்.

You'r reading இலங்கை தாதா அங்காட லொக்கா (36) வின் காதலி இலங்கை செல்ல தடை. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை