பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த 2 மாதமாக டாக் ஆப் த டவுன் ஆக இருந்தார். பாலிவுட்டில் போதை பொருள் உபயோகம் இருக்கிறது, அங்கு நடக்கும் பிரபலங்களின் பார்டிகளில் இலவசமாக போதை மருந்து தரப்படுவதாக கூறினார். இந்தி நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு பாலிவுட் வாரிசு நடிகர், நடிகைகள்தான் காரணம் என்றதுடன், மும்பை பாகிஸ்தான் ஆகிரமித்த காஷ்மீர் போல் உள்ளது என்று மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனா பற்றி கடுமையாக தாக்கி பேசினார்.
இதையடுத்து கங்கனாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது மும்பை வந்தால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று சிவசேனா தொண்டர்கள் அறிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசிடம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கமாண்டோ படை பாதுகாப்பு பெற்றார். அவர்களின் பாதுகாப்பு வளையத்தில் தற்போது கங்கனா இருக்கிறார்.இதற்கிடையில் கங்கனாவின் மும்பை பங்களாவில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாக கூறி அதை அதிகாரிகள் இடித்தனர். மேலும் கங்கனா போதை மருந்து பயன்படுத்தியாக வந்த வீடியோவின் அடிப்படையில் அவரிடம் அதிகாரிகள் விசாரனை நடந்த முடிவு செய்தனர், இதயடுத்து கங்கனா மும்பையிலிருந்து சொந்த ஊரான மனாலிக்கு சென்றார்.
ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மனாலியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தார் கங்கனா. ஜெயல்லிதா வாழ்கை படமாக உருவாகும் தலைவி படத்தின் படப்பிடிப்பில் கங்கனா கலந்து கொண்டார். படப்பிடிப்பு லொகேஷன் பற்றி தெரிவிக்காமல் நடந்த இந்த படப்பிடிப்பு ஷெட்யூ லும் முடிந்தது. சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்றது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இயக்குனர் ஏஎல் விஜய் இதனை படமாக்கினார். அதற்கான புகைப்படங்களையும் பட குழுக் வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.