முன்னணி நடிகருடன் திண்டுக்கல் போன நடிகை.

by Chandru, Oct 11, 2020, 14:56 PM IST

ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. தற்போது புதிய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கிறார். அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி வந்தது, தற்போது அதற்கான முழுவிவரத்தை பட நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழ்த் திரையுலகிற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் படங்களைத் தயாரித்து வருகிறது மாதவ் மீடியா நிறுவனம். 'ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மணப்பெண்ணே' மற்றும் சசி - ஹரிஷ் கல்யாண் இணையும் படம் ஆகியவை ஆகும்.

தற்போது தங்களுடைய தயாரிப்பில் ஐந்தாவதாக உருவாகும் பிரம்மாண்ட தயாரிப்பை அறிவிக்கிறது. முன்னணி இளம் நடிகரான சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்தப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டி மெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சிம்பு, இந்தப் படத்துக்காக உடல் இளைத்து முழுமையாக தன்னை அர்ப்பணித்து தயாராகியுள்ளார். அவருக்கு பொருந்தும் வகையில் இந்தக் கதையை செதுக்கியுள்ளார் சுசீந்திரன். இதில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்காக அனைவரும் திண்டுக்கல் சென்றுள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி என தொழில் நுட்பக் குழுவினரும் இந்தப் படத்துக்கு வலுவாக அமைந்ருப்பதால் வெற்றி என்பது உறுதியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்து மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. 2021-ம் ஆண்டு மக்களை மகிழ்விக்க இந்தப்படம் வெளியாகிள்ளது. தொடர்ச்சியாக தரமான படங்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்துள்ள மாதவ் மீடியா நிறுவனம், இந்தப் படமும் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்துக்கொள்கிறது. மாதவ் மீடியா சார்பில் பாலாஜி காப்பா தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் - சுசீந்திரன். ஒளிப்பதிவாளர் - திரு. இசையமைப்பாளர் - எஸ்.எஸ். தமன். எடிட்டர் - ஆண்டனி. தயாரிப்பு வடிவமைப்பு - ராஜீவன். பாடலாசிரியர் - யுக பாரதி. வசனங்கள் பாலாஜி கேசவன். கலை சேகர்.பி. நடன இயக்குநர் ஷோபி. சண்டைக் காட்சிகள் தினேஷ் காசி. ஆடைவடிவமைப்பாளர் உத்தரா மேனன். பி.ஆர்.ஓ நிகில் முருகன்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை