300 கோடி நஷ்டம்.. இந்தியாவில் நீடிக்குமா வால்மார்ட்?

by Balaji, Oct 12, 2020, 10:59 AM IST

அமெரிக்க நாட்டின் பிரபலமான வர்த்தக நிறுவனம் வால்மார்ட் வால்மார்ட்,இந்தியாவிலும் கடைகளை நடத்தி வருகிறது. 28 மொத்த விலை ஸ்டோர்களை நடத்தி வரும் வால்மார்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிட்டவில்லை என்றாலும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. கடந்த மார்ச் 31, 2020 வுடன் முடிவடைந்த நிதியாண்டில் நஷ்டம் 299.20 கோடி ரூபாய் . இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகம். சில்லறை வணிகர்களின் இழப்புகள் அதிகரித்துள்ளதால் நஷ்டம் அதிகரித்துள்ளது என வால்மார்ட் தெரிவித்துள்ளது.

வால்மார்ட் மொத்த விற்பனை வணிகத்தோடு மட்டுமல்லாமல் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தினையும் சமீபத்தில் கையகப்படுத்தியது.இந்த நிறுவனத்தின் செலவினம் முந்தைய ஆண்டைவிட 22% அதிகரித்து 5,225 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது . இந்த அதிகரிப்புக்குக் காரணம் சமீபத்தில் தான் ( ஜூலை மாதத்தில்) தான் பிளிப்கார்டினை வால்மார்ட் . கையகப்படுத்தியது எனினும் கடந்த 2018 லிலேயே பிளிப்கார்டில் 16 பில்லியன் டாலர்களை வால்மார்ட் , முதலீடு செய்திருந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விரிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் வணிகப் பிரிவுகள், உணவு மற்றும் மளிகை பிரிவில் விநியோக சங்கிலியினை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.இதற்கிடையில் பிக் பில்லியன் டே சலுகையினை பிளிப்கார்ட் நிறுவனம், வருகிற அக்டோபர் 16ம் தேதியன்று தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பண்டிகை கால அதிரடி சிறப்புத் தள்ளுபடி விற்பனை அக்டோபர் 21 வரை தொடரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு புறம் இந்த அதிரடியான சலுகைகளால் வாடிக்கையாளர்கள் நல்ல பலனை அடைவார்கள் என்றாலும், மறுபுறம் இந்தியாவின் விநியோக சங்கிலி பலப்படும் என்பது தான் இந்த நிறுவனத்தின் கருத்தாக இருக்கிறது. அத்துடன் தற்போதைய சூழலில் வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் இது வழிவகுக்கிறது என்கிறார்கள். பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த பண்டிகைக்காக விற்பனைக்கு முன்னதாக அந்த நிறுவனம் தனது விநியோக சங்கிலியையும் விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிய நகரங்களில் எங்கள் விநியோக சங்கியிலின் விரிவாக்கத்தினை கொரோனா தொற்று நோய் துரிதப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அடுத்த சில ஆண்டுகளில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் துரிதப்படுத்த உதவும். இது கைவினைஞர்கள், விற்பனையாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய உதவும் என்று தெரிவித்துள்ளது.

கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டாலும் வால்மார்ட்டின் புதிய ஒரே நம்பிக்கை பிளிப்கார்ட் நிறுவனம் மட்டுமே. ஏனென்றால் இந்தியாவில் வால்மார்ட்டை சுமந்து செல்வது பிளிப்கார்ட் தான்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More India News