கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது போத்தனூர்.25 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 18, 1995 அன்று ஒரு பெண்ணுக்கு நான்கு பெண் ஒரு ஆண் என ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. பிரேம்குமார் - ரமாதேவி தம்பதி தான் அந்த ஐவரின் பெற்றோர்.
இந்த ஐவரும் பிறந்தது உத்திரம் நட்சத்திர தினத்தன்று. எனவே ஐந்து குழந்தைகளுக்கும் நட்சத்திரத்தின் பெயரான உத்ர என்று துவங்கும் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர் பிரேம்குமார் - ரமாதேவி தம்பதியினர். சிறிய அளவிலான பலசரக்குக் கடை நடத்தி வந்தார்.உத்ரா, உத்ரஜா, உத்தரா, உத்தமா, உத்ரஜன் என்பது அவர்கள் பெயர்.
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்,பிறந்தது முதல் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பள்ளி படித்து, பத்தாவது தேர்வில் தேர்ச்சி பெற்று.இப்படி ஐந்து பேரின் வாழ்க்கையின் ஒவ்வொரு மைல்கல்லையும் ஊடகங்கள் கொண்டாடியது.தனது ஊரிலேயே சிறிய அளவிலான பலசரக்குக் கடை நடத்தி வந்தார் பிரேம்குமார். சொற்ப வருமானத்தில் அவர்களுக்கு ஏற்பட்டது ஒரே ஒரு சிக்கல். ஐந்து பேருக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒரே கலரில் உடைகள் எடுப்பதுதான் அந்த சிக்கல்.
'பஞ்சரத்தினங்கள் ' என்றழைக்கப்பட்ட இக்குழந்தைகளுக்கு பத்து வயது இருக்கும்போது பிரேம்குமார் திடீரென இறந்து போய்விட, நொறுங்கிப் போய் விட்டார் ரமாதேவி.ஐந்து குழந்தைகள் பிழைப்புக்கு வழி இல்லாத நிலையில் தவித்துக்கொண்டிருந்த ரமாதேவிக்கு ஆதரவு கரம் நீட்டினார் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி. கூட்டுறவு வங்கி ஒன்றில் ரமாதேவிக்கு வேலை கொடுத்தார் முதல்வர். பொருளாதாரக் கஷ்டம் தீர்ந்தது. அடுத்தடுத்து குழந்தைகள் வளர வளர மிகவும் சிரமப்பட்டு அவர்களை ஆளாக்கினார் ரமாதேவி.ஒரு வழியாய் சமாளித்து வந்த ரமாதேவிக்கு இதய நோய் ஏற்பட அதிர்ந்து போயின ஐந்து குழந்தைகளும் தீவிர சிகிச்சைக்குப்பின் பேஸ்மேக்கர் கருவியால் காப்பாற்றப்பட்டார்.
இப்போது உத்ராஜாவும் உத்தாமாவும் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாக உள்ளனர். உத்தாரா ஒரு பேஷன் டிசைனராகிவிட்டார் அவர்களின் ஒரே சகோதரன் உத்ராஜன் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார்.தொடர்ந்து இப்படி போராட்டங்களைச் சந்தித்து வந்த நிலையில்,வளர்ந்து பெரியவர்களாகி விட்ட ஐந்து பேருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்ய முடிவு செய்தார் ரமாதேவி.கடந்த ஆண்டு நவம்பரிலேயே நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்தார். ஏப்ரல் மாதம் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்ட நிலையில் கொரானா ஊரடங்கு அதற்குத் தடையாய் அமைந்து, அக்டோபர் மாதத்திற்குத் தள்ளிப்போனது .
இதிலும் ஒரு சின்ன சிக்கல் வந்தது. உத்ரஜாவிற்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வர முடியாமல் போய்விட்டது. தகப்பன் ஸ்தானத்திலிருந்து உத்ரஜன் தான் சகோதரிகளின் திருமணங்களை நடத்த வேண்டும். இதனால் அவரது திருமணமும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.எனவே மற்ற மூன்று பெண்களுக்கு மட்டும் நாளை (24 ம் தேதி) குருவாயூரில் வைத்து திருமணம் நடக்க இருக்கிறது.
போராட்டங்களை மட்டுமே வாழ்க்கையில் தொடர்ந்து சந்தித்து, எதிர் நீச்சல் போட்டுப் பழகிவிட்ட அம்மாவின் மன உறுதியும் தைரியமும் தான் எங்களின் எல்லா விஷயங்களுக்கும் உறுதுணையாக இருந்தது என்று ஐந்து பேரும் ஒருமித்த குரலில் பெருமையாகச் சொல்கிறார்கள்இந்த திருமணங்களாவது தடையின்றி நடக்க வேண்டும் என்பது அவர்களது பிரார்த்தனை.
இ.. விவாஹங்கள் நன்னாயி நடக்கான் குருவாயூரப்பன் அனுக்கிரஹிக்கணும்.