மகளை பலாத்காரம் செய்த வாலிபருடன் ஓட்டம் பிடித்த தாய்...!

Rape of minor, youth and mother of girl arrested

by Nishanth, Oct 23, 2020, 16:22 PM IST

தன்னுடைய 9 வயது மகளைப் பலாத்காரம் செய்த விவரம் தெரிந்தும், அந்த வாலிபருடன் தாய் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள இரிம்பிலியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒரு இளம்பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்தது. அந்த பெண்ணுக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவரது மூத்த மகளுக்கு 9 வயதாகிறது. அந்த இளம்பெண்ணின் கணவர் இல்லாத சமயங்களில் சுபாஷ் அடிக்கடி அவரது வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வழக்கம் போல சுபாஷ் சென்றுள்ளார். அப்போது அவர் வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரது 2 மகள்கள் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது சுபாஷ் அந்தப் பெண்ணின் 9 வயது மகளை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த தன் தாயிடம் அந்த சிறுமி நடந்த விவரத்தைக் கூறியுள்ளார். ஆனால் அது குறித்து வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மகளிடம் அவர் கூறினார்.

ஆனால் அந்த சிறுமி இது குறித்து அவருடைய நெருங்கிய உறவினரிடம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த உறவினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே அந்த சிறுமியின் தாயும், சுபாஷும் திடீரென தலைமறைவானார்கள். இதையடுத்து போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இதில் அவர்கள் இருவரும் கோவையில் ஒரு லாட்ஜில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மலப்புரம் போலீசார் கோவை சென்று இருவரையும் கைது செய்தனர். போலீசார் அவர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை