அதிரடி வேட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை!

Bribery department in action hunt!

by Loganathan, Oct 23, 2020, 16:03 PM IST

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை அடையாறு இந்திரா நகரிலுள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 55ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆயுதபூசையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

நாகை அருகே ஒரத்தூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் கேட்பதாகப் புகார்கள் எழுந்தது. இதையடுத்து நாகை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் உள்ளே சென்று 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இச்சோதனையில் 88 ஆயிரத்து இருநூற்று முப்பது ரூபாய் கைப்பற்றப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சோதனையில் 42ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 900ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு அதிக அளவில் பணம் கேட்பதாக வந்த புகாரினை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை