கிராமிய கலைஞர்களை கவுரவிக்க ஐநா சார்பில் விருது!

UN award to honor rural artists!

by Loganathan, Oct 23, 2020, 15:50 PM IST

இந்தியாவில் முதன் முறையாகக் கிராமியக் கலைஞர்களைக் கவுரவிக்க ஐநா சார்பில் விருது வழங்கப்படவுள்ளது.கோவையில் கல்லூரி மாணவர்களை வைத்து கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் "கிராமிய புதல்வன் " கலைக்குழுவை நடத்தி வருபவர் கலையரசன்.தமிழக அரசின் கலைப்பிரிவில் தூதராகவும் உள்ள கலையரசன், கிராமிய கலைகளில் உலக அளவில் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் ஐநா சபையின் பவள விழாவையொட்டி கலைஞர்களைக் கவுரவ படுத்தும் விதமாக, இந்தியாவில் முதன் முறையாகக் கலையரசனுக்குக் கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கலையரசன், தற்போதைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கிராமிய கலைகள் பற்றி எந்த புரிதலும் தெளிவும் இல்லாமல் உள்ளனர் என்றும், மேலும் நமது பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை நாம் மறந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார். இந்தநிலை இனியும் நீடிக்காமல் இருக்க, ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை கிராமிய கலைகளை, நாட்டுப்பறக்கலாவி என்ற பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதாகக் கலையரசன் கூறினார்.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை